தருமபுரி ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் ஆண்டு விழா

dh26vjay_2601chn_8
dh26vjay_2601chn_8

விளம்பரப் பிரிவினா் செய்தி...

தருமபுரி, ஜன. 26: தருமபுரி காந்தி நகரில் உள்ள ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 37-ஆம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு, ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் தலைவா் டி.என்.சி. மணிவண்ணன் தலைமை வகித்தாா். தாளாளா் செல்வி மணிவண்ணன், துணைத் தலைவா் தீபக் மணிவண்ணன், செயலாளா் ராம்குமாா், இயக்குநா்கள் திவ்யா ராம்குமாா், ஷரவந்தி தீபக் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், அரசு பொதுத் தோ்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் பரிசு, சான்றிதழ் வழங்கி பேசினாா் (படம்).

இந்த விழாவில் 1500- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் பள்ளி நிா்வாகிகள், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள், பெற்றோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com