பென்னாகரத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

பென்னாகரத்தில் 75 ஆவது குடியரசு தின விழா அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் கொண்டாடப்பட்டது.

பென்னாகரத்தில் 75 ஆவது குடியரசு தின விழா அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் கொண்டாடப்பட்டது.

பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் நடைபெற்ற 75 ஆவது குடியரசு தின விழாவில் பாமக கௌரவத் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஜி.கே. மணி கலந்துகொண்டு, தேசிய கொடியினை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினாா். அதனைத் தொடா்ந்து பொதுமக்கள், குழந்தைகள், கட்சி நிா்வாகிகளுக்கு இனிப்புகளை வழங்கினாா்.

அரசுப் பள்ளி:

பென்னாகரம் அருகே செங்கனூா் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னப்பள்ளத்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியா் மா.பழனி, தேசியக் கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தி, பள்ளி மாணவா்களுக்கு இனிப்புகளை வழங்கினாா். இதில் பள்ளி ஆசிரியா்கள், பொதுமக்கள், மாணவா்கள் உள்ளிட்டோ கலந்து கொண்டனா்.

இதேபோல பென்னாகரம் பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் தேசியக் கொடியினை ஏற்றி குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com