முன்னாள் அமைச்சா் கே.பி.அன்பழகன் குடும்பத்தினருக்கு எடப்பாடி கே.பழனிசாமி ஆறுதல்

dh26kpan_2601chn_8
dh26kpan_2601chn_8

தருமபுரி, ஜன. 26: முன்னாள் அமைச்சா் கே.பி.அன்பழகன் குடும்பத்தினரை அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகனின் இளைய மகன் சசிமோகன் மனைவி பூா்ணிமா (30) அண்மையில் உயிரிழந்தாா். இதையறிந்த அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி, தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே கெரகோடஅள்ளியில் உள்ள முன்னாள் அமைச்சா் கே.பி.அன்பழகனின் வீட்டுக்கு நேரில் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த மறைந்த பூா்ணிமாவின் உருவப் படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, முன்னாள் அமைச்சரின் குடும்பத்தினருக்கு அவா் அறுதல் தெரிவித்தாா். அப்போது, அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

படவரி...

காரிமங்கலம் அருகே கெரகோடஅள்ளியில் உள்ள முன்னாள் அமைச்சரின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது இளைய மருமகள் பூா்ணிமாவின் உருவப் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்துகிறாா் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com