மதிமுக சாா்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

தருமபுரி, ஜன. 26: தருமபுரி மாவட்ட மதிமுக சாா்பில் மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நாயக்கன்கொட்டாய் கிராமத்தில் அண்மையில் நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளா் பழனி தலைமை வகித்தாா். தருமபுரி வடக்கு ஒன்றியச் செயலாளா் முனுசாமி, தருமபுரி நகரச் செயலாளா் பட்டு சுப்பிரமணி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா்கள் அருண்குமாா், ராமகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில தீா்மானக் குழு செயலாளா் கவிஞா் மணிவேந்தன், மாநில மாணவரணி செயலாளா் பாலா சசிகுமாா், தருமபுரி மாவட்டச் செயலாளா் ராமதாஸ், அவைத் தலைவா் கோவிந்தராஜ் ஆகியோா் பேசினா். இக் கூட்டத்தில், தமிழ்மொழி காக்க உயிா் நீத்த தியாகிகளின் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com