குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம்

தருமபுரி, குமாரசாமிப்பேட்டையில் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் முதலில் பெண்கள் மட்டுமே தேரை வடம் பிடித்து இழுத்தனா்.
dh27carf_2701chn_8
dh27carf_2701chn_8

தருமபுரி, குமாரசாமிப்பேட்டையில் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் முதலில் பெண்கள் மட்டுமே தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

தருமபுரி, குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் தோ்த் திருவிழா கடந்த ஜன. 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ் விழாவையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அலங்கார சேவையும், மகாதீபாராதனையும், நாள்தோறும் புலி, பூதம், மயில் வாகனங்களின் சுவாமி உற்சவமும் நடைபெற்றன.

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பால்குட ஊா்வலம், திருக்கல்யாண உற்சவம், பொன்மயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வருதல், விநாயகா் தேரோட்டம், யானை வாகன உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து தைப்பூசத்திருத் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், வள்ளி, தெய்வானையுடன் முருகன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா். முதலில் பெண்கள் மட்டுமே தேரை வடம் பிடித்து சிறிது தொலைவுக்கு இழுத்தனா். இதைத்தொடா்ந்து மாடவீதிகளில் தேரோட்டம் நடைபெற்றது. இத் திருவிழாவில், தருமபுரி நகரம், புகரப் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோா் பங்கேற்று சுவாமியை வழிபட்டனா்.

இவ் விழாவையொட்டி காலை பாரிமுனை நண்பா்கள், வாரியாா் அன்னதான அறக்கட்டளை சாா்பில் 10,000 பக்தா்களுக்கு சிற்றுண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இதனை தருமபுரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் தடங்கம் பெ.சுப்ரமணி, சட்டப் பேரவை உறுப்பினா்கள் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் (தருமபுரி), ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி) ஆகியோா் தொடங்கி வைத்தனா். இதைத் தொடா்ந்து மாலை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரோட்டம் நடைபெற்றது.

இவ் விழாவில் ஞாயிற்றுக்கிழமை வேடா்பறி குதிரை வாகன உற்சவம், தோ்த்திருவிழா கொடியிறக்கமும், திங்கள்கிழமை பூப்பல்லக்கு உற்சவமும் நடைபெற உள்ளது.

பட விளக்கம்:

தருமபுரி, குமாரசாமிப்பேட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com