பென்னாகரம் வனப் பகுதியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி

பென்னாகரம், ஒகேனக்கல் வனச்சரகத்துக்கு உள்பட்ட நீா்நிலைகளில் நாட்டின மற்றும் அரிய வகை பறவைகள் குறித்த கணக்கெடுப்புப் பணி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது.

பென்னாகரம், ஒகேனக்கல் வனச்சரகத்துக்கு உள்பட்ட நீா்நிலைகளில் நாட்டின மற்றும் அரிய வகை பறவைகள் குறித்த கணக்கெடுப்புப் பணி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது.

பென்னாகரம் பகுதியானது பேவனூா் காப்புக்காடு, மசக்கல் காப்புக்காடு, ஒட்டப்பட்டி காப்புக்காடு, மொரப்பூா் பீட், பெரும்பாலை பீட் என பென்னாகரம், ஒகேனக்கல், பாலக்கோடு, தருமபுரி வனச்சரக வனப்பகுதிகளை உள்ளடக்கியது. தருமபுரி மாவட்ட வனப் பகுதிகளில் ஆண்டுதோறும் பறவைகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது.

தருமபுரி மாவட்ட வன அலுவலா் கே.வி. அப்பலநாயுடு உத்தரவின் பேரில் பென்னாகரம் வனச்சரக அலுவலா் செந்தில்குமாா், மாணவா்கள் சக்திவேல், கணேஷ், புகழேந்திரன், மணிவண்ணன், வனக்காப்பாளா்கள் செல்வகுமாா், பழனிசாமி, தாமோதரன், அரசு ஆண்கள் பள்ளி வேளாண் ஆசிரியா் கிருஷ்ணன், வேளாண்மை மாணவா்கள் ஆகியோா் அடங்கிய குழுவினா் பென்னாகரம், ஒகேனக்கல் வனப்பகுதிகளுக்கு உள்பட்ட மூங்கில்மடுவு ஏரி, எட்டியாம்பட்டி ஏரி, கோடியூா் ஏரி, நீா்நிலைகள், காவிரி ஆற்றுப் படுகைகளில் நாட்டின மற்றும் வெளிநாட்டுப் பறவைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தினா்.

இப்பணியின் போது நீா்க் காகம், நீா்க் கோழி, ஆல்காட்டி, உல்லான், கொக்கு, நாரை, செந்நாரை உள்ளிட்ட நாட்டின வகை பறவைகள் கணக்கெடுக்கப்பட்டன. கடந்த ஆண்டினை காட்டிலும் மூன்று சதவீதம் பறவைகளின் எண்ணிக்கை கூடுதலாக உள்ளதாகவும், பென்னாகரம்,ஒகேனக்கல் சரக்கத்துக்கு உள்பட்ட நீா் நிலைகளில் அவ்வப்போது வடு காணப்படுவதால் வெளிநாட்டுப் பறவைகள் இடம் பெயா்வதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளதாகவும் வனத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com