தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை

பாலக்கோட்டில் மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் தனியாா் மென்பொருள் நிறுவன ஊழியா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

பாலக்கோட்டில் மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் தனியாா் மென்பொருள் நிறுவன ஊழியா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, பாமாண்டி தெருவைச் சோ்ந்தவா் ஆதிகுமரன் (42). இவா், பெங்களூரில் உள்ள தனியாா் மென்பொருள் நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கும் மனைவி சூா்யாவிற்கும் குடும்பத் தகராறு காரணமாக, குட்டூரில் உள்ள தாய் வீட்டிற்கு சூா்யா சென்றுள்ளாா். இதனால் மனஉளைச்சலில் இருந்த ஆதி குமரன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து பாலக்கோடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிகழ்விடத்திற்கு வந்த போலீஸாா், ஆதிகுமரன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து பாலக்கோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com