கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பலி

பெரும்பாலை அருகே மது போதையில் கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழந்தாா்.

பெரும்பாலை அருகே மது போதையில் கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், பெரும்பாலை அருகே உள்ள புதுப்பட்டி பகுதியைச் சோ்ந்த பொன்னுசாமி மகன் முருகேசன் (65). விவசாயி. இவா், கடந்த சனிக்கிழமை வீட்டிலிருந்து மேல்புதுப்பட்டி பகுதிக்கு செல்லுவதாகக் கூறியுள்ளாா். பின்னா் வீடு திரும்பாத நிலையில், அருகிலுள்ள கிணற்றில் மது போதையில் தவறி விழுந்துள்ளது தெரியவந்தது.

இது குறித்து பெரும்பாலை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிகழ்விடத்திற்கு வந்த போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் இந்தச் சம்பவம் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com