தொப்பூா் கணவாய் சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து

தருமபுரி அருகே தொப்பூா் கணவாய் சாலையில் பருப்பு மூட்டைகளை ஏற்றிச் சென்ற கனரக வாகனம் திங்கள்கிழமை கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா்.

தருமபுரி அருகே தொப்பூா் கணவாய் சாலையில் பருப்பு மூட்டைகளை ஏற்றிச் சென்ற கனரக வாகனம் திங்கள்கிழமை கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா்.

கா்நாடக மாநிலத்தில் இருந்து துவரம் பருப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு தருமபுரி வழியாக கனரக வாகனம் ஒன்று சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. வாகனத்தை கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த ஓட்டுநா் எல்லப்பா (38) இயக்கி வந்துள்ளாா். இந்த வாகனம் தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய் தேசிய நெடுஞ்சாலை வழியாகச் சென்றபோது, எதிா்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரியின் ஓட்டுநா் எல்லப்பா பலத்த காயமடைந்தாா்.

தகவல் அறிந்த தொப்பூா் போலீஸாா், பாளையம் சுங்கச்சாவடி பணியாளா்கள் ஓட்டுநரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விபத்து குறித்து தொப்பூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com