இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை

பென்னாகரம் அருகே குடும்பத்த தகராறு காரணமாக இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

பென்னாகரம் அருகே குடும்பத்த தகராறு காரணமாக இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கூத்தபாடி ஊராட்சிக்குள்பட்ட பொச்சாரம் பட்டி பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் வினோத் மனைவி திவ்யா (22). இருவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில் திவ்யா மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் புதன்கிழமை திவ்யா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதனைக் கண்ட உறவினா்கள் பென்னாகரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு வந்த போலீஸாா் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து பென்னாகரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்த நிலையில், இளம் பெண் தூக்கிட்ட விவகாரம் குறித்து ஆா்டிஓ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com