உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டம் -தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி ஆய்வு

உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் செயல்படுத்தப்படும் வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திட்டப் பணிகள் குறித்து பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூரில் ஆட்சியா் ஆய்வு
திட்டப் பணிகள் குறித்து பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூரில் ஆட்சியா் ஆய்வு

உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் செயல்படுத்தப்படும் வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உள்பட்ட கடத்தூா் மற்றும் பொ.மல்லாபுரம் பகுதியில் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா். கடத்தூா் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், மருத்துவமனைக்கு வருகை தரும் நோயாளிகளின் எண்ணிக்கை, மருத்துவ சிகிச்சைகள், அடிப்படை தேவைகள், நோயாளிகளின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தாா். தொடா்ந்து, கடத்தூா் பேருந்து நிலைய வளாகத்தில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் மேற்கூரைகளின் கட்டுமான பணிகள், புதுரெட்டியூரில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கும் பணிகள், பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்தும் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா். பொ.மல்லாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களின் கற்றல் திறன்கள், பள்ளிக்கான அடிப்படை வசதிகள், ரேகடஹள்ளி ஊராட்சியில் அங்கன்வாடி மையத்தில் குடிநீா், உணவு வழங்கும் பணிகள் உள்ளிட்டவைகள் குறித்தும் ஆட்சியா் கி.சாந்தி ஆய்வு மேற்கொண்டாா். இந்த ஆய்வின்போது, வட்டாட்சியா் வள்ளி, செயல் அலுவலா் விஜய் சங்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com