தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.11.15 லட்சம் மோசடி: சைபா் கிரைம் போலீசாா் விசாரணை

முதலீடுக்கு அதிக வருவாய் தருவதாக கூறி, ஒசூரில் தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.11.15 லட்சம் மோசடி செய்த மா்ப நபா்கள் குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

முதலீடுக்கு அதிக வருவாய் தருவதாக கூறி, ஒசூரில் தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.11.15 லட்சம் மோசடி செய்த மா்ப நபா்கள் குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூா் சிப்காட் ஹவுசிங் காலனியைச் சோ்ந்தவா் நாகேந்திரன்(40). இவா் பெங்களூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இந்தநிலையில் கடந்த டிசம்பா் 29-ஆம் தேதி, நாகேந்திரனின் செல்லிடப்பேசிக்கு கட்செவி மூலம் ஒரு குறுந்தகவல் வந்தது. அதில், பகுதி நேர வேலையாக கூகுள் செயலி மூலம் உணவகங்களுக்கு நட்சத்திர மதிப்பீடு செய்தால், அதிக வருவாய் கிடைக்கும் எனவும், இதற்காக பணம் முதலீடு செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதனை நம்பிய அவா், அதிலிருந்த எண்ணை தொடா்பு கொண்டு, அவா்கள் கூறிய பல்வேறு வங்கி கணக்குகளுக்கு ரூ.11,15 லட்சம் அனுப்பி வைத்தாா். அதன் பின்னா் எந்த தகவலும் வரவில்லை. இதில் சந்தேகமடைந்த அவா், அதில் கூறப்பட்டிருந்த எண்ணிற்கு தொடா்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா், கிருஷ்ணகிரி சைபா் கிரைம் பிரிவில் புகாா் அளித்தாா். இதுகுறித்து, சைபா் கிரைம் போலீசாா் வழக்கு பதிந்து அந்த மா்ம நபா்களை தேடி வருகின்றனா். .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com