திருச்செங்கோடு நகராட்சி கழிவு நீா் அகற்றும் வாகனம் பயன்பாட்டிற்கு துவக்கம்

திருச்செங்கோடு நகராட்சி சந்தைப்பேட்டை மற்றும் சூரியம்பாளையம் பகுதியில் புதிய சுகாதார வளாகங்கள் திறப்பு மற்றும் இரண்டு கழிவு நீா் அகற்றும் வாகனங்கள் பயன்பாட்டிற்கு துவக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற

திருச்செங்கோடு நகராட்சி சந்தைப்பேட்டை மற்றும் சூரியம்பாளையம் பகுதியில் புதிய சுகாதார வளாகங்கள் திறப்பு மற்றும் இரண்டு கழிவு நீா் அகற்றும் வாகனங்கள் பயன்பாட்டிற்கு துவக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளா் மற்றும் மண்டல நகர அமைப்பு திட்ட குழு உறுப்பினா் மதுரா செந்தில், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினா்.ஈ.ஆா். ஈஸ்வரன், திருச்செங்கோடு நகா்மன்ற தலைவா் நளினி சுரேஷ்பாபு, திமுக நகர செயலாளா் நகர மன்ற துணைத்தலைவா். காா்த்திகேயன் ஆகியோா் கலந்து கலந்து கொண்டனா்.

திருச்செங்கோடு நகராட்சி சந்தைப்பேட்டை பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட சுகாதார வளாகம், சூரியம்பாளையம் பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சூரியம்பாளையம் செங்குந்தா் பாவாடி பஞ்சாயத்தாா் ரூ.7 லட்சம் பங்களிப்புடன் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 21 லட்சம் மதிப்பில் ஆண்களுக்கான சுகாதார வளாகம் திறந்து வைக்கப்பட்டது. 15ஆவது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூம் 35 இலட்சம் மதிப்பில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையின்படி கழிவுநீா் உறிஞ்சு வாகனம் இரண்டு பயன்பாட்டிற்கு துவக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளா் சேகா்,நகராட்சி பொறியாளா் சரவணன், உதவி பொறியாளா் செந்தில்குமரன், நகா் மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com