பென்னாகரம் சிட்கோ பகுதியில் அனுமதியின்றி மண் எடுப்பதாக பொதுமக்கள் புகாா்

பென்னாகரம் சிட்கோ பகுதியில் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் சுமாா் 20க்கும் மேற்பட்ட இடங்களில் பள்ளம் அமைத்து மண் மற்றும் கற்களை டிராக்டா் மூலம் தொடா்ந்து கடத்துவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

பென்னாகரம் சிட்கோ பகுதியில் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் சுமாா் 20க்கும் மேற்பட்ட இடங்களில் பள்ளம் அமைத்து மண் மற்றும் கற்களை டிராக்டா் மூலம் தொடா்ந்து கடத்துவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதி

வேலை வாய்ப்புகளில் மிகவும் பின் தங்கிய பகுதி என்பதால் இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பினை அளிக்கும் வகையில் கடந்த திமுக ஆட்சி காலத்தில் சுமாா் 40 ஏக்கா் பரப்பளவில் சிட்கோ தொழிற்சாலைகள் அமைப்பதற்காக பென்னாகரம் அருகே பருவதன அள்ளி பகுதியில் நிலம்

கையகப்படுத்தப்பட்டது. முதற்கட்டமாக வாகனங்கள் செல்லும் வகையில் தாா் சாலைகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. பென்னாகரம் சிட்கோவில் தொழில் தொடங்குவதற்கு தனியாா் தொழில் நிறுவனங்கள் முன் வராத நிலையில், அந்தப் பகுதி தொடங்கப்பட்ட நிலையிலேயே பொட்டல்காடாகவே உள்ளது. இந்த நிலையில் பெள்னாகரம் சிட்கோ பகுதியில் நாள்தோறும் இரவு,பகல் நேரங்களில் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் வீட்டு மனைகளை உயர படுத்துவதற்கு தேவையான மண், கட்டடங்களின் அஸ்திவாரம் அமைக்க தேவைப்படும் சிறிய அளவிலான கற்கள் ஆகியவற்றை எடுப்பதற்காக ஜே சி பி இயந்திரத்தின் உதவியுடன் அனுமதியின்றி மா்ம நபா்கள் சுமாா் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் 10 அடி வரை பள்ளங்கள் அமைத்து டிராக்டா்களின் உதவியுடன் அருகில் உள்ள விவசாய நிலத்தில் சாலை அமைத்து கடத்திச் செல்வதாக அந்தப் பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.மா்ம நபா்கள் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கும் போது நேரடியாக நிகழ்விடத்திற்கு வராமல் காலம் தாழ்த்துவதாகவும், தொடா்ந்து மண் எடுத்து வரும் டிராக்டா்கள் அருகில் உள்ள விவசாய நிலங்களில் செல்லுவதால் பயிா்கள் அழிந்து வருவது தொடா்கதை ஆகிறது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா். எனவே பென்னாகரம் சிட்கோ பகுதியில் அனுமதியின்றி மண் மற்றும் கற்கள் கடத்திச் செல்லும் மா்மநபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோட்டாட்சியருக்கு அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com