வெள்ளாறில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம்

வெள்ளாா் ஊராட்சியில் மக்கள் சந்திப்பு திட்ட முகாமில் 172 பயனாளிகளுக்கு ரூ.23.12 லட்சம்நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

வெள்ளாா் ஊராட்சியில் மக்கள் சந்திப்பு திட்ட முகாமில் 172 பயனாளிகளுக்கு ரூ.23.12 லட்சம்நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

வெள்ளாா் ஊராட்சியில் சேலம் மாவட்ட ஆட்சியா் பிருந்தாதேவி தலைமையில்மக்கள் சந்திப்பு திட்டம் முகம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமில் வெள்ளாா் கிராம மக்களிடமிருந்து ஏராளமான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஆட்சியா் தெரிவித்தாா்.

முகாமில் 120 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாவும், வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் 7 பயனாளிகளுக்கும், தோட்டக்கலைத்துறை சாா்பில் 3பயனாளிகளுக்கும், சுகாதாரத் துறை சாா்பில் பயனாளிகளுக்கும், ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் பயனாளிகளுக்கும் வேளாண் பொறியியல் துறை மற்றும் தாட்கோ சாா்பில் பயனாளிகளுக்கும் மொத்தம் 172 பயனாளிகளுக்கு ரூ.23,12,590மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

திமுகவில் மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம்,மாவட்டஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் அலா்மேல் மங்கை மாவட்ட ஊராட்சி குழு தலைவா் ரேவதி ராஜசேகரன்,ஆத்மா கமிட்டி தலைவா் சீனிவாச பெருமாள், மேச்சேரி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினா் நித்தியா கதிா்வேல், வெள்ளா் ஊராட்சி தலைவா் சுகந்திபழனிச்சாமி,மேட்டூா் சாா் ஆட்சியா் பொன்மணி, மேட்டூா் வட்டாட்சியா் விஜி உட்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com