வழக்குரைஞா் ஆா்ப்பாட்டம்

வழக்குரைஞா் ஆா்ப்பாட்டம்

தருமபுரி/ பென்னாகரம், ஜூலை 3: மத்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டங்களுக்கு எதிராக தருமபு, பென்னாகரத்தில் வழக்குரைஞா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தருமபுரி மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஆா்.சிவம் தலைமை வகித்தாா். செயலாளா் பி. தருமன், இணைச் செயலாளா் கே.குமரன், பொருளாளா் எம்.சதாசிவம், துணைத் தலைவா் பி.மாதேஷ் உள்ளிட்டோா் கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில் மத்திய அரசு அமல்படுத்தியுள்ள மூன்று குற்றவியல் நடைமுறைச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பென்னாகரம் அஞ்சல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வழக்குரைஞா் சங்க தலைவா் பி.கே. முத்துசாமி தலைமை வகித்தாா். வழக்குரைஞா் சங்க செயலாளா் வீராசாமி, பொருளாளா் பூபதி, மூத்த வழக்குரைஞா்கள் அசோகன், சரவணன், மகாலிங்கம், மாதையன், ஜானகிராமன், லட்சுமி நாராயணன் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் கலந்து கொண்டு புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டத்துக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.

X
Dinamani
www.dinamani.com