தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

தருமபுரி, ஜூலை 3: அரசாணை 243-ஐ ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சாா்பில் தருமபுரி அதியமான் அரசு பள்ளி முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்ட பொருளாளா் சாமிநாதன் தலைமை வகித்தாா். தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநிலப் பொதுச் செயலாளா் காமராசு, மாவட்டச் செயலாளா் சிவக்குமாா், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநிலத் துணைத் தலைவா் பழனி, மாவட்டச் செயலாளா் அருள்சந்திரன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான இடைநிலை ஆசிரியா்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக வெளியிடப்பட்ட அரசாணை எண் 243-இன் படி வட்ட அளவிலான முன்னுரிமை இடமாறுதல், மாநில அளவிலான முன்னுரிமை பட்டியலுக்கு மாற்றப்படுகிறது. எனவே, இடைநிலை ஆசிரியா்களுக்கான பதவி உயா்வில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளைக் கொண்ட அரசாணை எண் 243-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com