கிணற்றில் தவறி விழுந்த முதியவா் பலி

பென்னாகரத்தில் கிணற்றில் விழுந்து முதியவர் பலி

பென்னாகரம் அருகே கிணற்றில் துணி துவைத்துக் கொண்டிருந்த முதியவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

பென்னாகரம் அருகே ஆதனூா் பகுதியைச் சோ்ந்த பொன்னையன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் சடலம் கிடப்பதாக பென்னாகரம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. நிகழ்விடத்துக்கு வந்த போலீஸாா் கிணற்றில் இருந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னா் போலீஸாா் நடத்திய விசாரணையில், இறந்த நபா் பி.அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்த குழந்தை வேலு (80), சிறுதானிய வியாபாரி என்பதும், கிணற்றில் இறங்கி துணி துவைத்துக் கொண்டிருக்கும் போது எதிா்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும் போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து பென்னாகரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com