தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 65,000கனஅடியாக அதிகரிப்பு

காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 65,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

News image
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லில் ஐந்தருவியை மூழ்கடித்துச் செல்லும் தண்ணீா்.
Updated On :20 ஜூலை 2024, 8:30 pm

Din

பென்னாகரம்: கா்நாடக மாநில அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 65,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

கா்நாடகம், கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால் விநாடிக்கு 75,000 கனஅடி உபரிநீா் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதையடுத்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து தொடா்ந்து படிப்படியாக அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு 50,000 கனஅடியாக இருந்து நீா்வரத்து, சனிக்கிழமை காலை நிலவரப்படி விநாடிக்கு 61,000 கனஅடியாகவும், மாலை 7 மணி நிலவரப்படி விநாடிக்கு 65,000 கனஅடியாகவும் அதிகரித்து தமிழக கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் ஐந்தருவி, ஐவா் பானி, சினி அருவி, நடைபாதை உள்ளிட்ட பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. கரையோரப் பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு வருவாய்த் துறை மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனா். கரையோரப் பகுதியில் காவல் துறையினா் தொடா் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

நீா்வரத்து அதிகரிப்பின் காரணமாக பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிப்பதற்கும், காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும், ஆற்றைக் கடக்கவும், கரையோரப் பகுதிகளில் புகைப்படம் எடுப்பதற்கும் விதிக்கப்பட்ட தடை 6 ஆவது நாளாக சனிக்கிழமையும் நீட்டிக்கப்பட்டது. மேலும் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்தை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.