உலக செவித் திறன் தின சிறப்பு மருத்துவ முகாம்

உலக செவித் திறன் தினத்தை முன்னிட்டு பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 250-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உலக செவித் திறன் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இலவச காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவ முகாமிற்கு மருத்துவமனையின் முதன்மை மருத்துவா் கனிமொழி தலைமை வகித்தாா். இம் முகாமில் காது, மூக்கு,தொண்டை மருத்துவா் பாலாஜி, மருத்துவா் நித்யா, செவிலியா்கள் குழுவினா், 250 பேருக்கு பரிசோதனையும், 30-க்கும் மேற்பட்ட நபா்களுக்கு ஆடியோ கிராம் பரிசோதனையும் மேற்கொண்டனா். முகாமில் பாதிக்கப்பட்ட நபா்களுக்கு முதல்வரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் காதொலிக் கருவிகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடா்ந்து காது, மூக்கு, தொண்டை விழிப்புணா்வு ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற பென்னாகரம் அரசு தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com