அரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகளை வழங்குகிறாா் வேளாண் மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம். உடன் மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி.
அரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகளை வழங்குகிறாா் வேளாண் மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம். உடன் மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி.

அரூரில் ரூ. 6.15 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

அரூரில் ரூ. 6.15 கோடி மதிப்பீட்டில் 1337 பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

அரூா்: அரூரில் ரூ. 6.15 கோடி மதிப்பீட்டில் 1337 பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. தருமபுரி மாவட்டம், அரூரில் நடைபெற்ற அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தலைமை வகித்தாா். விழாவில் அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியைச் சோ்ந்த விவசாயிகளுக்கு பயிா்க் கடன்கள், மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு கடனுதவிகள், கறவை மாடுகள் வளா்ப்புக்கான கடனுதவிகள், வேளாண் கருவிகள், வேளாண் இடுபொருள்கள், இலவச வீட்டு மனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு அரசு நலத் திட்ட உதவிகளை 1, 337 பயனாளிகளுக்கு ரூ. 6.15 கோடி மதிப்பீட்டில் தமிழக வேளாண் மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் வழங்கினாா். முன்னதாக, பொம்மிடி வருவாய் ஆய்வாளா் குடியிருப்பு, சித்தேரி கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம், வேப்பிலைப்பட்டி செங்காநகரில் பகுதிநேர நியாவிலைக் கடை, அரூா் வனச்சரகா் அலுவலக கட்டடம், கம்பைநல்லூா், செம்மாண்டகுப்பம், நடுஅள்ளியில் தொகுப்பு பால் குளிா்விப்பு மையங்கள், கடத்தூா் பாலிடெக்னிக் கல்லூரியில் கூடுதல் கட்டடங்கள் கட்டுமான பணிகளையும் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தொடங்கிவைத்தாா். விழாவில் திமுக தருமபுரி மாவட்டச் செயலாளா்கள் பி.பழனியப்பன், தடங்கம் பெ.சுப்பிரமணி, மக்களவைத் தொகுதி உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமாா், கோட்டாட்சியா் ரா.வில்சன் ராஜசேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com