செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கு கல்விச் சுற்றுலா

செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கு கல்விச் சுற்றுலா

செவித் திறன் குறைபாடுடைய குழந்தைகள் ஒரு நாள் கல்விச் சுற்றுலா அனுப்பி வைக்கப்பட்டனா். தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து செவித்திறன் குறைபாடுடையோருக்கான ஆரம்பக் கால பயிற்சி மைய குழந்தைகளை ஒரு நாள் கல்விச் சுற்றுலா அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு ஆட்சியா் கி.சாந்தி தலைமை வகித்து, சுலா வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இக்குழந்தைகள் ஒரு நாள் சுற்றுலாவாக, திருப்பத்தூா் மாவட்டம் ஏலகிரி மலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இந்த நிகழ்ச்சியில், தனித்துணை ஆட்சியா் தனப்பிரியா, சுற்றுலா அலுவலா் து.உமா சங்கா், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் செண்பகவள்ளி, உதவி சுற்றுலா அலுவலா் கதிரேசன், பள்ளி ஆசிரியா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com