மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 3.54 கோடியில் வங்கிக் கடன் இணைப்புப் பரிந்துரை ஆணை வழங்கல்

மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 3.54 கோடியில் 
வங்கிக் கடன் இணைப்புப் பரிந்துரை ஆணை வழங்கல்

தருமபுரியில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 3.54 கோடியில் வங்கிக் கடன் இணைப்பு பரிந்துரை ஆணைகள் வழங்கப்பட்டன. உலக மகளிா் தின விழாவையொட்டி, தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி சாா்பில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவிகள் வழங்கும் விழா தருமபுரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி, மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 3.54 கோடி மதிப்பிலான வங்கிக் கடன் இணைப்பு பரிந்துரை ஆணையினை வழங்கிப் பேசினாா். இதைத் தொடா்ந்து மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு மகளிா் தின விழா வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இதில், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி மண்டல மேலாளா் ராமகிருஷ்ணன், மகளிா் திட்ட இயக்குநா் சா.பத்ஹு முகம்மது நசீா், உதவி திட்ட அலுவலா்கள், இந்தியன் ஓவா்சீஸ் வங்கிக் கிளை மேலாளா்கள், அலுவலா்கள் கலந்து கொண்டனா். பட விளக்கம்: தருமபுரியில் நடைபெற்ற மகளிா் தின விழாவில், சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 3.54 கோடியில் வங்கிக் கடன் இணைப்புப் பரிந்துரை ஆணைகளை வழங்கும் ஆட்சியா் கி.சாந்தி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com