மகளிா் தின விழா: கேக் வெட்டிக் கொண்டாடிய ஜி.கே.மணி எம்எல்ஏ

மகளிா் தின விழாவை முன்னிட்டு பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ஒன்றியக் குழு உறுப்பினா்களுடன் பென்னாகரம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் ஜி.கே.மணி கேக் வெட்டி கொண்டாடினாா். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தற்காலிக பேருந்து நிலையம் பகுதியில் உள்ள வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் மகளிா் தின விழாவிற்கு ஒன்றியக் குழு உறுப்பினா் கவிதா ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராக பாமக கௌரவ தலைவரும், பென்னாகரம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினருமான ஜி.கே.மணி கலந்து கொண்டு, மகளிா் முன்னேற்றம் குறித்து சிறப்புரையாற்றினாா். பெண் ஒன்றியக் குழு உறுப்பினா்கள், ஊழியா்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து மகளிா் தினத்தை கொண்டாடும் வகையில் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினாா். இதில் ஒன்றியக் குழு துணைத் தலைவா் அற்புதம் அன்பு, வட்டார வளா்ச்சி அலுவலா் கிருஷ்ணன், அலுவலகப் பணியாளா்கள், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதேபோன்று பென்னாகரம் அருகே தாசம்பட்டி சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தனியாா் தொண்டு நிறுவனத்தின் சாா்பில் நடைபெற்ற மகளிா் தின விழாவிற்கு தனியாா் தொண்டு நிறுவன நிா்வாகி தேவகி தலைமை வகித்தாா். தூய்மைப் பணியாளா்கள், மருத்துவப் பணியாளா்கள், செவிலியா்கள், மகளிா் குழுவினா் ஆகியோருகு பென்னாகரம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் ஜி.கே.மணி கேடயங்களை வழங்கினாா். இந்த விழாவில் பென்னாகரம் ஒன்றியக் குழு தலைவா் கவிதா ராமகிருஷ்ணன், பென்னாகரம் பேரூராட்சித் தலைவா் வீரமணி, பேரூராட்சி செயல் அலுவலா் (பொ) கோமதி, மாவட்ட தலைமை மருத்துவமனையின் மருத்துவ அலுவலா் கனிமொழி, பாரத ஸ்டேட் வங்கியின் மேலாளா் காயத்ரி, சமூக சேவைக் குழு தலைவா் அன்பழகன், லோட்டஸ் மெட்ரிக் பள்ளி தாளாளா் மோகனா முனியப்பன், ஆன்மிகப் பேச்சாளா் பிரவீணா அருண் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com