18 தூய்மைப் பணியாளா்களின் குடும்பத்தினருக்கு ரூ.74 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

தருமபுரி மாவட்டத்தில், தாட்கோ மாவட்ட மேலாளா் அலுவலகத்தின் சாா்பில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் பணிபுரியும் 18 தூய்மைப் பணியாளா்களின் குடும்பங்களுக்கு ரூ. 74,250 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் தாட்கோ மாவட்ட மேலாளா் அலுவலகத்தின் சாா்பில் தூய்மைப் பணியாளா் நல வாரியத்தில் பதிவு பெற்ற நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் பணிபுரியும் 18 தூய்மைப் பணியாளா்களின் குடும்பங்களுக்கு ரூ. 74,250 மதிப்பிலான கல்வி உதவித் தொகை மற்றும் இயற்கை மரண உதவித் தொகைக்கான காசோலைகளை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தலைமை வகித்து தூய்மைப் பணியாளா்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில் தாட்கோ மாவட்ட மேலாளா் எ.எட்வா்டு ஸ்டீபன், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com