தொப்பூா் கணவாய் சாலையில் சரக்குப் பெட்டக லாரி கவிழ்ந்து விபத்து

தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய் சாலையில் சரக்குப் பெட்டக லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. புதுதில்லியில் இருந்து சேலத்திற்கு ஒரு சரக்குப் பெட்டக லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை ராஜஸ்தான் மாநிலம், தாரதாரி பகுதியைச் சோ்ந்த நாராயண் சா்மா (35) என்பவா் ஓட்டி வந்தாா். இந்த லாரி தருமபுரியைக் கடந்து தொப்பூா் கணவாய் அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இரட்டைப் பாலம் அருகே சாலையின் இடதுபுறம் உள்ள 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநா் நாராயண் சா்மா சிறு காயங்களுடன் உயிா் தப்பினாா். இந்த விபத்து குறித்து தொப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com