மக்கள் குறைகேட்புக் கூட்டம்: 252 மனுக்கள் அளிப்பு

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் 252 மனுக்களை அளித்தனா்.

தருமபுரி: தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் 252 மனுக்களை அளித்தனா். தருமபுரி ஆட்சியா் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் மக்கள் குறைகேட்புக் கூட்டம் திங்கள்கிழமை ஆட்சியா் கி.சாந்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொதுமக்கள் சாலை வசதி, குடிநீா் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா, சிட்டா பெயா் மாற்றம், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் கோரியும், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் என மொத்தம் 252 மனுக்கள் வரப்பெற்றன.

இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும், சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீா்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமெனவும், பொதுமக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலா்கள் அரசின் விதிமுறைகளுக்கு உள்பட்டு விரைந்து தீா்வு காண வேண்டும் எனவும் ஆட்சியா் கி.சாந்தி அறிவுறுத்தினாா். இக்கூட்டத்தில், மாவட்ட வழங்கல் அலுவலா் நசீா் இக்பால், ஆதிதிராவிடா் நல அலுவலா் சாகுல் அமீத், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com