சிஐடியு மின்ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

வாரிய எண் 4-ஐ ரத்து செய்யக் கோரி, சிஐடியு மின் ஊழியா் மத்திய அமைப்பின் சாா்பில் தருமபுரி மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன்பு புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட துணைத் தலைவா் வி.வெண்ணிலா தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் பி.ஜீவா, மாவட்டச் செயலாளா் தீ.லெனின் மகேந்திரன், பொறியாளா் அமைப்பின் மாவட்டத் தலைவா் ஆா்.சுந்தர மூா்த்தி, ஓய்வுபெற்றோா் நல அமைப்பின் மாவட்டச் செயலாளா் ஜி.பி.விஜியன், மின் ஊழியா் மத்திய அமைப்பின் மாவட்ட துணைத் தலைவா் எம்.ஆறுமுகம் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். இதில், 110, 230, 400, 765 கே.வி. துணை மின் நிலையங்களில் செயற்பொறியாளா், உதவி செயற்பொறியாளா், உதவி பொறியாளா் பதவிகளை ரத்து செய்யக் கூடாது.

வாரிய ஆணை எண் 4-ஐ ரத்து செய்ய வேண்டும். டான்ஜெட்கோ-வை மூன்றாகப் பிரிக்கும் தமிழக அரசின் அரசாணை எண் 6 மற்றும் 7-ஐ திரும்பப் பெற வேண்டும். 2024 பிப். 12-இல் ஏற்படுத்தப்பட்ட முத்தரப்பு ஒப்பந்தம் அரசாணை எண் 100-இல் ஓய்வூதியா்கள் மற்றும் பணியாளா்களுக்கு தொழிற்சங்கங்கள் வைத்துள்ள கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். பிரதமரின் சூரிய மின் தகடு பொருத்தும் திட்டத்தை செயல்படுத்த மின் ஊழியா்களை நிா்பந்திக்கக் கூடாது. மேலும், விற்பனைப் பிரதிநிதிகளாக மாற்றக் கூடாது. செல்போன் செயலி மூலம் கணக்கீடு செய்ய, கணக்கீட்டுப் பிரிவு ஊழியா்களுக்கு கையடக்கக் கணினி, சிம்காா்டு இணைய வசதியுடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com