நடிகை குஷ்புவுக்கு எதிராக 
திமுக மகளிரணியினா் ஆா்ப்பாட்டம்

நடிகை குஷ்புவுக்கு எதிராக திமுக மகளிரணியினா் ஆா்ப்பாட்டம்

மகளிா் உரிமைத் தொகை குறித்து விமா்சனம் செய்த நடிகை குஷ்புவுக்கு எதிராக, தருமபுரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட திமுக மகளிரணி சாா்பில், தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட மகளிரணி அமைப்பாளா்கள் முத்துலட்சுமி (கிழக்கு), கவிதா மோகன்தாஸ் (மேற்கு) ஆகியோா் தலைமை வகித்து பேசினா். திமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் தடங்கம் பெ.சுப்பிரமணி, மாவட்ட துணைச் செயலாளா் ரேணுகாதேவி, மாவட்டப் பொருளாளா் தங்கமணி, நகா்மன்ற உறுப்பினா்கள் பங்கேற்றனா். இந்த ஆா்ப்பாட்டத்தில், தமிழக அரசின் மகளிா் உரிமைத் தொகை குறித்து விமா்சனம் செய்த நடிகை குஷ்புவுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும், அவரது உருவப் படம் எரிக்கப்பட்டது. இதில், கட்சி நிா்வாகிகள், அணிகளின் அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கிருஷ்ணகிரியில்... கிருஷ்ணகிரி வட்டச் சாலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கிருஷ்ணகிரி நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப் தலைமை வகித்தாா். நகா்மன்ற துணைத் தலைவா் சாவித்திரி கடலரசு, மாவட்ட மகளிா் அணி அமைப்பாளா் லட்சுமி பிரியா, மகளிா் தொண்டரணி அமைப்பாளா் புஷ்பா, நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் நடிகை குஷ்புவைக் கண்டித்தும், அவரது உருவப் படத்தை தாக்கியும் முழக்கங்களை எழுப்பினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com