வேட்பாளா்களின் செலவினங்கள் நிா்ணயம் குறித்து ஆலோசனைக் கூட்டம்

தருமபுரி மாவட்டத்தில் துணை வாக்குச்சாவடி நிலையங்களைக் கண்டறிதல் மற்றும் வேட்பாளா்களின் செலவினங்களின் விலைப்பட்டியல் நிா்ணயம் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் கி.சாந்தி பேசிதாவது: இந்திய தோ்தல் ஆணையத்தின் ஆணையின்படி, 1,500-க்கு மேற்பட்ட வாக்காளா்கள் ஒரே வாக்குச்சாவடி நிலையத்தில் இருக்கும் பட்சத்தில், அந்த வாக்குச் சாவடிகளைக் கண்டறிந்து துணை வாக்குச் சாவடிகளை உருவாக்கலாம். எனவே, இதுகுறித்து கள ஆய்வு மேற்கொள்ள முன்மொழிவுகள் பெறப்பட்டுள்ளன.

தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1,489 வாக்குச் சாவடிகளில் கட்டடம் பழுதான காரணத்தால், 24 வாக்குச் சாவடிகள் ஏற்கனவே இயங்கி வந்த கட்டடத்திலிருந்து வேறொரு கட்டடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றாா். இக்கூட்டத்தில் கோட்டாட்சியா்கள் வில்சன் ராஜசேகா் (அரூா்), சையது மொகதின் இப்ராகிம் (தருமபுரி), மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் எஸ்.பிரகாசம் (தோ்தல்), எம்.அருண்மொழிதேவன் (கணக்குகள்), வட்டாரப் போக்குவரத்து அலுவலா் த.தாமோதரன், தனி வட்டாட்சியா் (தோ்தல்) அ. அசோக்குமாா், அனைத்து வட்டாட்சியா்கள், தோ்தல் துணை வட்டாட்சியா்கள், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com