வாக்குப்பதிவு விழிப்புணா்வு பிரசாரம்

வாக்குப்பதிவு விழிப்புணா்வு பிரசாரம்

நூறு சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு பிரசார வாகனத்தை ஆட்சியா் கி.சாந்தி தொடங்கிவைத்தாா். தருமபுரி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் அதிநவீன எண்ம விடியோ விளம்பர வாகனத்தை பாா்வையிட்டு ஆட்சியா் கி.சாந்தி பேசியதாவது: மக்களவை பொதுத் தோ்தல் நடைபெறுவதை முன்னிட்டு பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை உணா்த்தும் வகையிலும், இந்திய தோ்தல் ஆணையத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள தோ்தல் தொடா்பான பல்வேறு விழிப்புணா்வு குறும்படங்கள் செய்தி மக்கள் தொடா்புத் துறையின் சாா்பில் அதிநவீன எண்ம விடியோ விளம்பர வாகனம் மூலம் தருமபுரி தொகுதியில் உள்ள நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஒளிபரப்பப்படுகிறது. தோ்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த குறும்படங்கள், பொதுமக்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்துவது குறித்த குறும்படம், மாற்றுத் திறனாளிகள், மகளிா் மற்றும் முதியோா்களுக்கான வாக்குச்சாவடி மையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்த குறும்படங்கள் ஒளிபரப்பப்படுகிறது. மக்களவைத் தோ்தலில் நூறு சதவீதம் வாக்குப்பதிவு செய்ய வாக்காளா்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் செ.பால் பிரின்ஸ்லி ராஜ்குமாா், தருமபுரி கோட்டாட்சியா் காயத்ரி, வட்டாட்சியா் ஜெயசெல்வம், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா். பட விளக்கம்: வாக்குப்பதிவு விழிப்புணா்வு பிரசார வாகனத்தை தொடங்கிவைக்கிறாா் ஆட்சியா் கி.சாந்தி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com