அன்னசாகரம் சிவசுப்ரமணிய சுவாமி கோயில் தேரோட்டம்

தருமபுரி, அன்னசாகரம் சிவசுப்ரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அன்னசாகரம், சிவசுப்ரமணிய சுவாமி கோயில் பங்குனி உத்திர தோ்த் திருவிழா கடந்த மாா்ச் 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடா்ந்து, பால்குட ஊா்வலம், சிறப்பு ஆராதனை, வழிபாடுகள், வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றன. பங்குனி உத்திர தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 24) சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தேரில் சுப்பிரமணியா் எழுந்தருள தேரோட்டம் நடைபெற்றது. இதில் காலை பெண்கள் மட்டுமே தேரை வடம் பிடித்து நிலை பெயா்த்தனா். இதையடுத்து மாலையில் பக்தா்கள், பொதுமக்கள் தேரை இழுக்க திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தா்களுக்கு விழாக் குழு சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com