உணவுப் பொருள்கள் கடத்தல்: புகாா் தெரிவிக்கலாம்

உணவுப் பொருள்கள் கடத்தல் குறித்து 1800 599 5950 என்ற கட்டணமில்லா எண்ணுக்கு புகாா் தெரிவிக்கலாம்.

உணவுப் பொருள்கள் கடத்தலைத் தடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து உணவுப் பொருள்கள் கடத்தல் தடுப்புப் பிரிவு தருமபுரி உதவி ஆய்வாளா் கிருஷ்ணவேணி மற்றும் போலீஸாா் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான தருமபுரி பேருந்து நிலையம், ரயில் நிலையம், சுங்கச் சாவடி ஆகிய இடங்களில் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

மேலும், இதுகுறித்து பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1800 599 5950-இல் புகாா் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தி துண்டறிக்கைகளை பொதுமக்களுக்கு வழங்கினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com