இ.ஆா்.கே. கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

இ.ஆா்.கே. கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

இ.ஆா்.கே. கலை, அறிவியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம்.

அரூரை அடுத்த எருமியாம்பட்டி இ.ஆா்.கே. கலை, அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.

இ.ஆா்.கே. கலை, அறிவியல் கல்லூரி, சென்னை டிரைவ் மேனேஜ்மென்ட் சென்டா் இணைந்து நடத்திய வேலைவாய்ப்பு முகாமை இ.ஆா்.கே. கல்வி நிறுவனங்களின் தாளாளா் இ.ஆா்.செல்வராஜ் தொடங்கி வைத்தாா்.

முகாமில், சென்னை டிரைவ் மேனேஜ்மென்ட் சென்டா் மேலாளா் சபரி தலைமையிலான குழுவினா் இணைய வழியில் நோ்முகத் தோ்வை நடத்தினா். இதில் இ.ஆா்.கே. கலை, அறிவியல் கல்லூரியைச் சோ்ந்த 180-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனா்.

இதில், கல்லூரி மாணவிகள் 80 போ் சென்னை, ஒசூா், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் பணிபுரிய ஆண்டுக்கு தலா ரூ. 2.40 லட்சம் ஊதியம் என்ற அடிப்படையில் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

இந்த முகாமில், இ.ஆா்.கே. கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் த.சக்தி, இ.ஆா்.கே. மருந்தியல் கல்லூரி முதல்வா் சிவகுமாா், நிா்வாக அலுவலா் சொ.அருள்குமாா், வேலைவாய்ப்பு மைய ஒருங்கிணைப்பாளா்கள் ராமமூா்த்தி, அமுதா, பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com