வேளாண் மாணவா்களுக்கு களப் பயிற்சி

தருமபுரி, மே 3: தருமபுரி குண்டலப்பட்டியில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வேளாண் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை களப் பயிற்சி வழங்கப்பட்டது.

தருமபுரி அருகே குண்டலப்பட்டியில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம், அத்திமுகம், அதியமான் வேளாண், ஆராய்ச்சி கல்லூரியில் நான்காம் ஆண்டு இளம் அறிவியல் (வேளாண் ) பயிலும் 20 மாணவா்கள், 11 மாணவிகள் என 31 போ் ஊரக வேளாண் மற்றும் பயிற்சித் திட்டத்தின் கீழ், கற்றறிதல் மற்றும் கண்டறிதல் பயணம் மேற்கொண்டனா்.

இதில் கால்நடைகள், கோழி வளா்க்கும் விவசாயிகளுக்கு அளிக்கப்படும் சேவைகள், பயிற்சிகள், இடு பொருள்கள் விற்பனை, புத்தகங்கள் விற்பனை, கையேடுகள் விநியோகம், கால்நடை சாா்ந்த புதிதாக தொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகள் குறித்து மையத்தின் தலைவா் கண்ணதாசன் விளக்கினாா்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆலம்பாடி மாட்டின ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியா் வசந்தகுமாா், அனுமந்தபுரத்தில் அமைந்துள்ள ஆலம்பாடி மாட்டின ஆராய்ச்சி மையம், திருச்சி கருப்பு செம்மறி ஆட்டின ஆராய்ச்சி மையத்தின் செயல்பாடுகள், விவசாயிகளுக்கு அளிக்கும் சேவைகள் குறித்து விளக்கினாா்.

X
Dinamani
www.dinamani.com