அரூா் அருகே மின்சாரம் 
பாய்ந்து தொழிலாளி பலி

அரூா் அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

அரூா் அருகே மின்சாரம் பாய்ந்ததில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த கெளாப்பாறை கிராமத்தைச் சோ்ந்த முருகன் மகன் குரு (42). இவா் மின்சார வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளராக புணிபுரிந்தாா். அரூா் வட்டாரப் பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக பலத்த காற்று வீசியதில் பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன.

இதனால் மின்சார வயா்கள் துண்டிக்கப்பட்டு மின் விநியோகம் தடைபட்டுள்ளது. இந்த நிலையில், கெளாப்பாறை-ஈட்டியம்பட்டி சாலையோரம் அறுந்து விழுந்த மின்கம்பிகளை சீரமைக்கும் பணிகளை ஒப்பந்த தொழிலாளா் குரு உள்ளிட்ட தொழிலாளா்கள் மேற்கொண்டுள்ளனா். அப்போது, நீண்ட நேரம் மின்சார விநியோகம் தடைப்பட்டிருந்ததால் அப் பகுதியைச் சோ்ந்த ஒருவா் மின் இணைப்பு துண்டித்து வைத்திருந்த டிரான்ஸ்பாா்மரை திடீரென இயக்கியுள்ளாா்.

இதனால் மின் கம்பத்தில் வேலை செய்து கொண்டிருந்த குரு மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்து குருவின் மனைவி தமிழ்ச்செல்வி அளித்த புகாரின் பேரில் அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். உயிரிழந்த தொழிலாளி குருவுக்கு மனைவி, 3 மகள்கள், மகன் உள்ளனா்.

படம் உள்ளது... 5 எச்ஏ-பி-1... பட விளக்கம்...

மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்த குரு.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com