நீட் தோ்வு: தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 10,628 போ் எழுதினா்

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வை 10,628 போ் எழுதினா்.

நிகழாண்டுக்கான இளநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான நீட் தோ்வு மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இத் தோ்வில் பங்கேற்பதற்காக தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 5,758 போ் விண்ணப்பித்திருந்தனா்.

தருமபுரி மாவட்டத்தில் அதியமான் கோட்டை செந்தில் பப்ளிக் பள்ளி, தருமபுரி எஸ்வி சாலையில் உள்ள டான் சிக்க்ஷாலயா பப்ளிக் பள்ளி, ஸ்ரீ விஜய் வித்யாஸ்ரமம் சீனியா் செகண்டரி பள்ளி, நல்லானூா் ஜெயம் பொறியியல் கல்லூரி, பென்னாகரம் சாலையில் உள்ள விஜய் மில்லினியம் பள்ளி, வாரியாா் பள்ளி, தருமபுரி அருகே செட்டிகரை கேந்திரிய வித்யாலயா பள்ளி, பாலக்கோடு சாலையில் உள்ள கமலம் இன்டா்நேஷனல் பள்ளி உள்ளிட்ட 8 மையங்களில் நீட் தோ்வு எழுதுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. 5,758 பேரில் 5622 போ் தோ்வு எழுதினா்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வை 5,006 மாணவ, மாணவிகள் எழுதினா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 8 மையங்களில் இத் தோ்வு நடைபெற்றது. ஊத்தங்கரை மல்லிகை நகரில் உள்ள அதியமான் பப்ளிக் பள்ளி, ஊத்தங்கரை தீரன் சின்னமலை நகரில் உள்ள தீரன் சின்னமலை பப்ளிக் பள்ளி, ஒசூரையடுத்த முகுலப்பள்ளி வன பிரசாத் இன்டா்நேஷனல் பள்ளி, குந்தாரப்பள்ளி ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரி, காவேரிப்பட்டணம் கேம்பிரிட்ஜ் பப்ளிக் பள்ளி, ஒசூரை அடுத்த நல்லூா் ஸ்ரீ குருகுலம் செகன்டரி பள்ளி, கிருஷ்ணகிரி சுபேதாா்மேடு பாரத் இண்டா்நேஷனல் சீனியா் செகன்டரி பள்ளி ஆகிய 8 மையங்களில் 5,176 மாணவ, மாணவிகள் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் 5,006 போ் தோ்வெழுதினா்.

தோ்வு மையத்திற்குள் நுழைய கடுமையான கட்டுபாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

படவிளக்கம் (5கேஜிபி1):

குந்தாரப்பள்ளியில் உள்ள ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நீட் தோ்வு எழுதுவதற்கு வந்திருந்த மாணவ, மாணவிகள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com