கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

ஒடிசாவில் இருந்து தனியாா் சொகுசுப் பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த வட மாநில இளைஞா்களை தொப்பூா் போலீஸாா் கைது செய்தனா்.

தருமபுரி: ஒடிசாவில் இருந்து தனியாா் சொகுசுப் பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த வட மாநில இளைஞா்களை தொப்பூா் போலீஸாா் கைது செய்தனா்.

தொப்பூா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பாளையம் சுங்கச்சாவடியில் கஞ்சா தடுப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளா் சுந்தரமூா்த்தி தலைமையிலான போலீஸாா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். தருமபுரி பகுதியில் இருந்து வந்த சொகுசுப் பேருந்தை நிறுத்தி ஓட்டுநரின் அனுமதியோடு சோதனை நடத்தினா்.

அப்போது, பேருந்தின் பின்பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் அமா்ந்திருந்த இரண்டு இளைஞா்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்ததில் அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. பின்னா் இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்ட போது ஒடிசாவைச் சோ்ந்த இருவா் கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்ததை ஒப்புக் கொண்டனா். அவா்களிடமிருந்து 11 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com