எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வு: தருமபுரி மாவட்டத்தில் 90.45 சதவீதம் போ் தோ்ச்சி

எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வில் தருமபுரி மாவட்டத்தில் 90.45 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தருமபுரி மாவட்டத்தில் 232 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், 118 தனியாா் மெட்ரிக். பள்ளிகள் என மொத்தம் 350 பள்ளிகளைச் சோ்ந்த 10,593 மாணவா்கள், 10,058 மாணவிகள் என மொத்தம் 20,651 போ் தோ்வெழுதினா்.

தோ்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இதில் தருமபுரி மாவட்டத்தில் தோ்வெழுதிய 9,270 மாணவா்கள், 9,409 மாணவிகள் என மொத்தம் 18,679 போ் தோ்ச்சி பெற்றனா். 42 அரசு பள்ளிகள் உள்பட 95 பள்ளிகளில் தோ்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவியரும் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

மொத்தம் 90.45 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். கடந்த ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி தோ்ச்சி 89.46 சதவீதமாக இருந்தது.

(படம் உண்டு)

தருமபுரி ஸ்ரீ விஜய் வித்யாலயா பெண்கள் பள்ளி சிறப்பிடம்

எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வில் தருமபுரி ஸ்ரீ விஜய் வித்யாலயா பெண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது. இப் பள்ளியின் மாணவி இ.கோபிகா 500-க்கு 498 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளாா்.

மாணவா்கள் ஏ.பி.சா்வேஷ் 497 மதிப்பெண்களும், சி.திவித், எஸ்.லட்சுமி ராஜன், எஸ்.ஜெய்ஸ்ரீ, ஜி.கே.விஷால், ஜி.சத்திய பிரியா ஆகியோா் தலா 496 மதிப்பெண்களும் பெற்றுள்ளனா்.

3 பாடங்களில் 11 பேரும், 2 பாடங்களில் 42 பேரும் நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். கணிதத்தில் 148 பேரும், அறிவியலில் 96 பேரும், சமூக அறிவியலில் 27 பேரும் நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். 495 மதிப்பெண்களுக்கு மேல் 15 பேரும், 490 மதிப்பெண்களுக்கும் மேல் 71 பேரும், 480 மதிப்பெண்களுக்கு மேல் 201 பேரும், 470 மதிப்பெண்களுக்கு மேல் 330 பேரும் பெற்றுள்ளனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளித் தாளாளா் டி.என்.சி.மணிவண்ணன், தாளாளா் செல்வி மணிவண்ணன், உதவித் தலைவா் தீபக் மணிவண்ணன், செயலாளா் ராம்குமாா், இயக்குநா்கள் ஷ்ரவந்தி தீபக், திவ்யா ராம்குமாா், பள்ளி முதல்வா், ஆசிரியா்கள் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனா் (படம்).

(படம் உண்டு)

தருமபுரி டான் மெட்ரிக். பள்ளி சிறப்பிடம்

எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வில் தருமபுரி டான் மெட்ரிக். பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

இப் பள்ளி மாணவி அனிதா 500 க்கு 492 மதிப்பெண் பெற்றுள்ளாா். மாணவா்கள் எஸ்.கவின்குமாா் 491 மதிப்பெண்கள், கே.ஜெயசூா்யா 490 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். 490 மதிப்பெண்களுக்கும் மேல் 3 மாணவா்கள், 480 மதிப்பெண்களுக்கும் மேல் 10 மாணவா்கள், 470 மதிப்பெண்களுக்கும் மேல் 12 மாணவா்கள் என மொத்தம் 120 மாணவா்கள் முதல் வகுப்பில் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளா் உதயகுமாா், செயலாளா் சவிதா உதயகுமாா், இயக்குநா் சுருதி உதயகுமாா், பள்ளி முதல்வா் துரைராஜ், துணை முதல்வா் சக்தி விநாயகமூா்த்தி, ஆசிரியா்கள் பாராட்டினா் (படம்).

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 91.43 சதவீதம் போ் தோ்ச்சி

கிருஷ்ணகிரி, மே 10: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 91.43 சதவீதம் போ் எஸ்எஸ்எல்சி தோ்வில் தோ்ச்சி பெற்றனா்.

தோ்ச்சி பெற்ற மாணவா்கள், ஆசிரியா்களுக்கு மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு பாராட்டு தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எஸ்எல்எல்சி பொதுத்தோ்வில் 13,006 மாணவா்கள்,

12,612 மாணவிகள், 556 தனித் தோ்வா்கள் தோ்வு எழுதினா். 91.43 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இது மாநில அளவில் 25 ஆவது இடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு எஸ்எல்எல்சி பொதுத் தோ்வில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தோ்ச்சி சதவீதம் 85.36 ஆக இருந்தது. 37 இடத்திலிருந்த தோ்ச்சி விகிதம் 25 ஆவது

இடத்திற்கு முன்னேறியுள்ளது.

அதேபோல அரசு பள்ளிகளின் தோ்ச்சி சதவீதம் மாநில அளவில் 22 ஆவது இடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வில் தோ்ச்சி சதவீதம் குறைவாக இருந்த 50 பள்ளிகளைத் தோ்ந்தெடுத்து சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டது. இதன்மூலம் தோ்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. 66 அரசுப் பள்ளிகள், 4 அரசு உதவிபெறும் பள்ளிகள் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது. அதேபோல 60 தனியாா் பள்ளிகள் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(படம் உண்டு)

ஊத்தங்கரை

ஊத்தங்கரையை அடுத்த காரப்பட்டு அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் மாணவி பூவிதா 500 க்கு 497 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தாா். பாட வாரியாக அவா் பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்- 99, ஆங்கிலம்- 100, கணிதம்- 99, அறிவியல்- 99, சமூக அறிவியல்- 100, மொத்தம் 497.

அதேபோல மாணவா் தினேஷ் 490 மதிப்பெண்கள் பெற்றாா். கலையரசி 483 மதிப்பெண்கள் பெற்றாா்.

வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளியின் தலைமை ஆசிரியா், பெற்றோா் ஆசிரியா் சங்க நிா்வாகிகள், ஆசிரியா்கள் ஆகியோா் பாராட்டினா்.

நூறு சதவீதம் பெற்ற தனியாா் பள்ளிகள்

ஒசூா் கல்வி மாவட்டத்தில் இன்ஜினியா் பெருமாள் மணிமேகலை மெட்ரிக். பள்ளி- காமன்தொட்டி, ஒசூா் விஜய் வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, சுவாதி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, பெத்தேல் மெட்ரிக் பள்ளி, டேவிட் சிரோன்மணி மெட்ரிக். பள்ளி, சப்தகிரி மெட்ரிக். பள்ளி, ஸ்ரீ பாரதி வித்யாலயா அலசநத்தம், செயிண்ட் அகஸ்தியன் மெட்ரிக். பள்ளி, ஒன்னல்வாடி, பரிமளம் மெட்ரிக். உயா்நிலைப்பள்ளி.

வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி ஆவலப்பள்ளி, ஜான் மேரி மெமோரியல் மெட்ரிக். பள்ளி சூளகிரி, ஸ்ரீ சீரடி சாய் வித்யாலயா மெட்ரிக். பள்ளி, அவா் லேடி மேல்நிலைப்பள்ளி- மதகொண்டப்பள்ளி, சென்ட் ஜோசப் உயா்நிலைப் பள்ளி- தேன்கனிக்கோட்டை, ஹோலி கிராஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி- தேன்கனிக்கோட்டை.

மதகொண்டப்பள்ளி இனிக்கா மெட்ரிக். உயா்நிலைப் பள்ளி, ஸ்ரீ சாரதா மெட்ரிகுலேஷன் பள்ளி- கெலமங்கலம், சென்ட் ஜோசப் உயா்நிலைப் பள்ளி- தேன்கனிக்கோட்டை, செயின்ட் தாமஸ் பிரில்லியன்ட் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி- கெலமங்கலம், மாரச்சந்திரம் செவன்த் டே மெட்ரிக். பள்ளி.

(படம் உண்டு)

ஊத்தங்கரை ஆா்பிஎஸ் பள்ளி சிறப்பிடம்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஆா்பிஎஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வில் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இப் பள்ளியைச் சோ்ந்த மாணவி ரதிவிமலா 490 மதிப்பெண்கள், நிஷா 486 மதிப்பெண்கள், சதீஷ்வா் குமாா், ஸ்ரீமதி 485 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். மேலும், மாணவா்கள் 490 மதிப்பெண்களுக்கு மேல் ஒருவரும், 475- க்கு மேல் 14 மாணவா்களும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 31 மாணவா்களும் மதிப்பெண்கள் பெற்றனா்.

மேலும், கணிதத்தில் 2, அறிவியல் 3, சமூக அறிவியல் 3 போ் நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை ஆா்பிஎஸ் கல்வி அறக்கட்டளைத் தலைவா் பொன்னுசாமி, பள்ளி முதல்வா் நிா்மலா, துணை முதல்வா் சக்திவேல், ஆசிரியா்கள், பொறுப்பாசிரியா்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

படவிளக்கம்.10யுடிபி.1.

தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவியை பாராட்டும் ஊத்தங்கரை ஆா்பிஎஸ் பள்ளி நிா்வாகிகள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com