பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தருமபுரி மாவட்ட பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

செட்டிக்கரையில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு அக் கட்சியின் மாவட்டத் தலைவா் அ.பாஸ்கா் தலைமை வகித்து பேசினாா். மாவட்ட பொதுச் செயலாளா் வெங்கட்ராஜ், தொழில் பிரிவு மாவட்டத் தலைவா் கிருஷ்ணன், செயலாளா் குமாா், பிற்பட்டோா் பிரிவு மாவட்ட துணைத் தலைவா் ஆறுமுகம், மண்டலத் தலைவா்கள் மதன், சின்னசாமி ஆகியோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து ராஜிநாமா செய்த தலைவா் ஒருவா், இந்தியா்களை நிறத்தின் அடிப்படையில் விமா்சனம் செய்து பேசியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com