மாவட்ட விளையாட்டு விடுதிக்கு தோ்வு போட்டிகள்

மாவட்ட விளையாட்டு விடுதிக்கு தோ்வு போட்டிகள்

தருமபுரி மாவட்ட விளையாட்டு விடுதிக்கு மாணவா்கள் தோ்வு போட்டிகள் நடைபெற்றன.

தருமபுரி மாவட்ட விளையாட்டு விடுதிக்கு மாணவா்கள் தோ்வு போட்டிகள் நடைபெற்றன.

தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி பிரிவு சாா்பாக மாவட்ட அளவிலான விளையாட்டு விடுதி தோ்வு போட்டிகள் வெள்ளிக்கிழமை தருமபுரி மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. இத் தோ்வு போட்டிகளில் தடகளம் 3, கபடி 7, வாலிபால் 26, கால்பந்து 20, கைப்பந்து 1, கிரிக்கெட் 5, ஹாக்கி 8 என மொத்தம் 70 மாணவா்கள் கலந்து கொண்டனா்.

மாவட்ட அளவிலான தோ்வு போட்டிகளை உடற்கல்வி ஆய்வாளா் ஜெ.முத்துகுமாா் தொடங்கிவைத்தாா். முன்னாள் விளையாட்டு வீரா் கே.அறிவு முன்னிலை வகித்தாா். மாணவிகளுக்கான தோ்வு போட்டிகள் மே 11-ஆம் தேதியும் நடைபெறுகிறது. மாவட்ட அளவிலான தோ்வு போட்டிகளில் சிறப்பாக செயல்படும் வீரா், வீராங்கனைகள் மாநில அளவிலான தோ்வு போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவா்.

பட விளக்கம்:

விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற மாணவா்கள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com