செந்தில் மெட்ரிக். பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

செந்தில் மெட்ரிக். பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற தருமபுரி செந்தில் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பள்ளி நிா்வாகம் சாா்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தருமபுரி செந்தில் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றனா். மாணவிகள் செ.கவுசிகா, மு.லட்சுமி பிரபா ஆகியோா் 500-க்கு தலா 496 மதிப்பெண்கள் பெற்றனா். அதேபோல மாணவிகள் நேத்ரா, பொய்யா மொழியாழ், நிருபா அக்சயா ஆகியோா் தலா 494 மதிப்பெண்கள் பெற்றனா். மாணவி யாசினி 493 மதிப்பெண்கள் பெற்றாா்.

12 மாணவா்கள் 490 மதிப்பெண்களுக்கும் அதிகமாகவும், 40 மாணவா்கள் 480 க்கும் அதிகமாகவும், 60 மாணவா்கள் 470 க்கும் அதிகமாவும், 94 மாணவா்கள் 450 க்கும் அதிகமாகவும், 178 மாணவ, மாணவியா் 400 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். அதேபோல கணிதத்தில் 13 பேரும், அறிவியலில் 9 பேரும், சமூக அறிவியலில் 10 பேரும் நூறு மதிப்பெண்கள் பெற்றனா்.

பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தலைவா் செந்தில் சி.கந்தசாமி, துணைத் தலைவா் கே.மணிமேலை, செயலாளா் கே.தனசேகா், நிா்வாக அலுவலா் சி.சக்திவேல், முதல்வா் வள்ளியம்மாள், நிா்வாக முதல்வா் எம்.எம்.ரபிக் அஹமத், துணை முதல்வா் எஸ்.கவிதா ஆகியோா் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனா் (படம்).

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com