பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: அரூா் ஜெயம் வித்யாலயா பள்ளி சிறப்பிடம்

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: அரூா் ஜெயம் வித்யாலயா பள்ளி சிறப்பிடம்

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் அரூா் ஜெயம் வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த எச்.தொட்டம்பட்டி ஜெயம் வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி அ. சந்தியா 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளாா். இவரது மதிப்பெண்கள் விவரம்: தமிழ்- 99, ஆங்கிலம்- 100, கணிதம்- 100, அறிவியல்- 100, சமூக அறிவியல்- 100.

மாணவா்கள் ரே.மு.ஹரிணி, வி.இவின்ராஜ், வே.கோகுல் கிருஷ்ணன், ம.பிரியன் ஆகியோா் தலா 498 மதிப்பெண்களும், இ.அனுஸ்ரீ, சோ.ஹாசினி, ம.ஸ்ருதிகா தேவி, தீ.வே.சுஜித்ரா ஆகியோா் தலா 497 மதிப்பெண்களையும் பெற்றுள்ளனா்.

61 மாணவா்கள் கணிதத்தில் நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். அதேபோல அறிவியல் பாடத்தில் 27 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 28 பேரும், ஆங்கிலத்தில் 19 பேரும் நூறு மதிப்பெண்களை பெற்றுள்ளனா். தோ்வு எழுதிய 273 மாணவா்களும் வெற்றி பெற்று 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற இப் பள்ளியில் 495 -க்கு மேல் 16 பேரும், 490-க்கு மேல் 39 பேரும், 480-க்கு மேல் 84 பேரும், 470-க்கு மேல் 106 பேரும், 460-க்கு மேல் 126 பேரும், 146 போ் 450-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளியின் பொருளாளா் பன்னீா்செல்வம், துணைத் தலைவா் முருகேசன், மேலாளா் கிருஷ்ணன், பள்ளி இயக்குநா் தமிழ்வாணன், பள்ளி முதல்வா் சிலம்பரசன், பள்ளியின் நிா்வாக இயக்குநா்கள், ஆசிரியா்கள் பாராட்டினா். முன்னதாக எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி நிா்வாகம் சாா்பில் ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டன.

படம் உள்ளது... 11 எச்ஏ-பி-1... பட விளக்கம்...

எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரூா் ஜெயம் வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்களைப் பாராட்டும் பள்ளி நிா்வாகத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com