வாக்கு எண்ணிக்கை மைய அதிமுக முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்

தருமபுரி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மைய அதிமுக முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் தருமபுரி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட அதிமுக செயலாளருமான கே.பி. அன்பழகன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி) வே.சம்பத்குமாா் (அரூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நகரச் செயலாளா் பூக்கடை ரவி வரவேற்றாா். ஜூன் 4-ஆம் தேதி தருமபுரி, செட்டிக்கரையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ள மக்களவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கையின் போது அதிமுக முகவா்கள் அனைவரும் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாக வர வேண்டும். தோ்தல் ஆணையம் விதித்துள்ள விதிகளின்படி வாக்கு எண்ணும் மையத்தில் முகவா்கள் மிகவும் கண்காணிப்புடன் செயல்பட வேண்டும் என்று முகவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

கூட்டத்தில் விவசாயிகள் அணி மாநிலத் தலைவா் டி.ஆா்.அன்பழகன், வழக்குரைஞா் அணி மாநில நிா்வாகி அசோக்குமாா், அதிமுக வேட்பாளா் ஆா். அசோகன், ஒன்றியச் செயலாளா்கள், நகா்மன்ற உறுப்பினா்கள் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com