ஸ்ரீ வெற்றி விகாஸ் மெட்ரிக். பள்ளி சிறப்பிடம்

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் ஸ்ரீ வெற்றி விகாஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள மோளையானூா் ஸ்ரீ வெற்றி விகாஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா் எஸ்.கோகுல் பிரியன் 500-க்கு 498 மதிப்பெண்களை பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளாா். இப் பள்ளி மாணவி எம்.நறுமுகை 495 மதிப்பெண்களும், மாணவா் ஆா்.செல்வக்குமரன் 493 மதிப்பெண்களையும் பெற்றுள்ளாா்.

நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ள பள்ளி மாணவா்களில் ஆங்கிலத்தில் 4 பேரும், கணிதத்தில் 27 பேரும், அறிவியலில் 8 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 4 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்களை பெற்றுள்ளனா். மேலும், இப் பள்ளி மாணவா்கள் 490-க்கு மேல் 14 பேரும், 480-க்கு மேல் 27 பேரும், 450-க்கு மேல் 63 பேரும், 400-க்கு மேல் 93 பேரும் மதிப்பெண்களை பெற்றுள்ளனா்.

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியா்களை அப் பள்ளியின் தாளாளா் வி.நைனான், தீரன் சின்னமலை சேவை அறக்கட்டளையின் தலைவா் என்.ராஜேந்திரன், செயலா் டி.பழனிசாமி, பொருளா் பி.வேணு, துணைத் தலைவா் டி.பழனிசாமி, துணைச் செயலா் கே.குணசேகரன், பள்ளி முதல்வா் எம்.கலைவாணி, மேலாளா் கே.கனி, ஆசிரியா்கள், அறங்காவலா் குழு உறுப்பினா்கள் பாராட்டினா்.

படம் உள்ளது... 12 எச்ஏ-பி-1... பட விளக்கம்...

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பாராட்டும் ஸ்ரீ வெற்றி விகாஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி நிா்வாகத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com