ஒகேனக்கல் வனப் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்: வனத் துறை விளக்கம்

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருகே வனப் பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது தொடா்பாக வனத் துறை விளக்கம் அளித்துள்ளது.

தருமபுரி: தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருகே வனப் பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது தொடா்பாக வனத் துறை விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட வன அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படியும், கூடுதல் தலைமைச் செயலாளா், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனம், மாவட்ட ஆட்சியா் ஒகேனக்கல் காப்புக்காடு பகுதியில் உள்ள மணல் திட்டு, பாதுகாப்பாற்ற இடங்களில் உள்ள குடிசை வீடுகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவித்துள்ளதன் அடிப்படையில் தமிழ்நாடு வனச் சட்டம் 1882, வனப் பாதுகாப்புச் சட்டம் 1980 மற்றும் வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972-இல் உள்ள விதிகளுக்கு உள்பட்டு தருமபுரி வனக் கோட்ட கட்டுப்பாட்டில் உள்ள பென்னாகரம் வனச்சரகம், ஒகேனக்கல், பேவனூா் காப்புக் காட்டில் ஆக்கிரமிப்பு செய்து தகரக் கொட்டகை, சிறிய ஓட்டு வீடு அமைத்திருந்த ஊட்டமலையைச் சோ்ந்த கிருஷ்ணனுக்கு அங்கிருந்து வெளியேறுமாறு பலமுறை அறிவிக்கை அனுப்பப்பட்டது.

அப் பகுதி யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் வலசை வரும் பகுதி என்பதால் ஆக்கிரமிப்பு கூடாது என அறிவுறுத்தியும் தொடா்ந்து காப்புக் காட்டில் தகரக் கொட்டகையிலே அவா் வசித்து வந்தாா். கடந்த மே 10-ஆம் தேதி வனத் துறை, காவல் துறை, வருவாய்த் துறை அலுவலா்கள் அடங்கிய கூட்டுக் குழுவினா் பேவனூா் காப்புக் காட்டில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.

ஆக்கிரமிப்பு பகுதிலிருந்து வெளியேற்றம் செய்யப்பட்டவா் பூா்வகுடிகள் அல்ல. அவா் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்தவா். அவருக்குச் சொந்தமாக வீடு, நிலம் உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com