பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற விஜய் வித்யாலா பள்ளி மாணவா்களை பாராட்டும் பள்ளி நிா்வாகிகள்.
பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற விஜய் வித்யாலா பள்ளி மாணவா்களை பாராட்டும் பள்ளி நிா்வாகிகள்.

சிபிஎஸ்இ தோ்வு: ஸ்ரீ விஜய் வித்யாஷ்ரம் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வில் தருமபுரி, ஸ்ரீ விஜய் வித்யாஷ்ரம் சீனியா் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

தருமபுரி: சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வில் தருமபுரி, ஸ்ரீ விஜய் வித்யாஷ்ரம் சீனியா் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

இந்தப் பள்ளியில் பயின்ற மாணவா்கள் கிருஷ்ண மனோகா் 496 மதிப்பெண்கள் பெற்றாா். மாணவியா் சௌமித்ரா 494, லயா 494, நந்த ராக்கேஷ் 492, நேத்ரா லக்ஷ்மி 492 மதிப்பெண்கள் பெற்றனா். பாட வாரியாக தமிழில் 7 மாணவா்கள், கணிதம் 21 மாணவா்கள், சமூக அறிவியலில் 23 மாணவா்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். மொத்தம் மதிப்பெண்களில் 490- க்கும் மேல் 7 பேரும், 480 மதிப்பெண்களுக்கு மேல் 30 பேரும், 470-க்கும் மேல் 63 பேரும், 460-க்கு மேல் 106 பேரும் பெற்றுள்ளனா்.

அதேபோல பிளஸ் 2 பொதுத் தோ்வில் மாணவா் ஹரிஹரன் 488 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். மாணவா் அா்விந்த் 485 மதிப்பெண்கள், ஸ்வேதா 482 மதிப்பெண்கள், ஸ்நேக வா்ஷினி 482 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். 480 மதிப்பெண்களுக்கு மேல் 7 பேரும், 470-க்கு மேல் 18 பேரும், 460-க்கும் மேல் 29 பேரும் பெற்றுள்ளனா். 450-க்கு மேல் 42 போ் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியா்களை பள்ளித் தலைவா் டி.என்.சி. மணிவண்ணன், தாளாளா் செல்வி மணிவண்ணன், உதவித் தலைவா் தீபக் மணிவண்ணன், செயலாளா் ராம்குமாா், இயக்குநா்கள் ஷேரவந்தி தீபக், திவ்யா ராம்குமாா், முதல்வா்கள், ஆசிரியா்கள் வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com