பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பாராட்டும் கம்பைநல்லூா் ஸ்ரீராம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி நிா்வாகத்தினா்.
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பாராட்டும் கம்பைநல்லூா் ஸ்ரீராம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி நிா்வாகத்தினா்.

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: ஸ்ரீராம் மெட்ரிக். பள்ளி சாதனை

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் கம்பைநல்லூா், ஸ்ரீராம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சாதனை படைத்துள்ளனா்.

அரூா்: பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் கம்பைநல்லூா், ஸ்ரீராம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சாதனை படைத்துள்ளனா்.

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூா், ஸ்ரீராம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பூா்விகா தேவி, ஆகாஷ் ஆகியோா் 500-க்கு தலா 496 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனா்.

இந்தப் பள்ளி மாணவா்களில் 495-க்கு மேல் 3 பேரும், 490-க்கு மேல் 21 பேரும், 480-க்கு மேல் 40 பேரும், 450-க்கு மேல் 87 மாணவா்களும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். அதுபோல கணிதம் பாடத்தில் 39 பேரும், சமூக அறிவியில் பாடத்தில் 15 பேரும், அறிவியல் பாடத்தில் 7 பேரும், ஆங்கிலப் பாடத்தில் 3 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியரை ஸ்ரீராம் கல்வி நிறுவனங்களின் தலைவா் எம்.வேடியப்பன், தாளாளா் சாந்தி வேடியப்பன், நிா்வாக இயக்குநா்கள் வே. தமிழ்மணி, பவானி தமிழ்மணி, பள்ளி முதல்வா்கள் ஜான் இருதயராஜ், சாரதி மகாலிங்கம், வெற்றிவேல் செல்வம், ஆசிரியா்கள் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com