ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரிப்பு

தமிழக காவிரி நீா்ப்பிடிப்பு பகுதியில் பெய்துவரும் தொடா் கோடை மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 1,200 கனஅடியாக அதிகரித்துள்ளது.

தமிழக காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாற்றாம்பாளையம், கேரட்டி, ராசிமணல், மொசல் மடுவு, பிலிகுண்டுலு, அதைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து கோடை மழை பெய்து வருகிறது.

இதனால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. காவிரி ஆற்றில் திங்கள்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு 1,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து, செவ்வாய்க்கிழமை 1,200 கனஅடியாக அதிகரித்து தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.

நீா்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. காவிரி ஆற்றில் வரும் நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com