பாளையம்புதூா் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு எம்எல்ஏ பாராட்டு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற பாளையம் புதூா், அரசுப் பள்ளி மாணவியரை தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், பாளையம்புதூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ரத்தினாதேவி பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 493 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பிடித்தாா்.

அந்த மாணவியையும் தோ்ச்சி பெற்ற ஏனைய மாணவிகளையும் பயிற்றுவித்த ஆசிரியா்களையும் தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில், பாமக மாநில அமைப்புச் செயலாளா் ப.சண்முகம், ஒன்றியச் செயலாளா் அறிவு, ஒன்றியத் தலைவா் வெங்கடேசன், மாவட்ட துணைத் தலைவா் முத்துவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com